Search This Blog

23 September 2016

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும்

**உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- உங்கள் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- உங்கள் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- உங்களுக்கு ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

**உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் கைமடிப்பு,கழுத்து மடிப்பு,கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- உங்கள் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**உங்கள் முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து உங்களது முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

**உங்கள் உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு,பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் தோள்பட்டை, முதுகுத்தாரை,குதிங்கால் இவற்றில் இருக்கமோ வலியோ வந்தால் --- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

**உங்கள் கைவிரல் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

07 September 2016

5 FACTS ABOUT LIFE

1) No matter how beautiful/ handsome you are, just
remember that baboons and gorillas also attract tourists.

2) No matter how big and strong you are, you shall not carry yourself to the grave.

3) No matter how tall you are, you can never see
tomorrow.

4) No matter how light skinned you are, you always need a light in the dark.

5) No matter how rich and how many cars you have, you will always walk to bed....

So take it easy....life is short....eternity is real.☺ Christ is still coming regardless of who you are.

If thetrumpet sounds today where will you be today. Christ is coming soon and we are called to repent now Rev 22:12.

03 September 2016

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!

தீராத முற்றிய நிலையிலுள்ள புற்று நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினர்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் புற்றுநோய் குணப்படுத்தும் முறை:

"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் சிகிச்சைமுறைகளில், சமீபகால  வெற்றிவிகிதம் 80%.

புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது-   அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.

நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.

பழங்கள் சாப்பிடும் முறை;;

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி,  வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.

நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி'  அதுவும் 'எப்போது' சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

பழங்கள் ஒரு முக்கியமான உணவு;

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில்,  அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.

அதனால் தயவு செய்து பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் சாப்பிடுங்கள்.!!

பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது,   எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .

உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!

உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
நடக்காமல் தடுக்கப்படும்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை  என்பதெல்லாம் உண்மையில்லை! எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.

சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் ரகசியம் கிடைத்து விடும்.

3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, புதிதான பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் வேண்டாம்.

சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.

சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.

கிவி பழம்;

இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!

ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி ;
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals)   இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல்  நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.

ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி;

மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

கொய்யா& பப்பாளி

இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத்  தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.

உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர்  அல்லது பானங்கள் குடிப்பது =  புற்று நோய்.

ஓர் இதயநோய் நிபுணர் சொல்வது;;
இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம் என்பது உறுதி. . .

02 September 2016

Heart Attack

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு
S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம்.

ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R  அதாவது, SMILE (சிரிக்க சொல்வது), TALK (பேச சொல்வது), RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது) போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம். மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதாவது, அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும், அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம். அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர்களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள்.

இட்லி மாவு

கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது. மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசைமாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
இந்த மாவு ஒரு ஸ்லோ பாய்ஸன் மாதிரி என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை. இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் பயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது.

1. 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைப்பதாக செய்திகள் வருகின்றன.

2. ஒரு நாளைக்கு 3–6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12-18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால், அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு, மாவுடன் கலந்து விட வாய்ப்புகள் அதிகம். இதனால் சிறுநீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது.

3. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும், நல்ல தண்ணீரை ஊற்றித்தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை பயன்படுத்தினால் திண்டாட்டம் தான்.

4. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டிபயாடிக்); இது உடம்பு உஷ்ணம், வாய்துர்நாற்றம், குடல்புண் போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. கடைமாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை என செய்தி.
மேலும் ஈகோலை (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது, (–24 ) மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுப்படும்; அவ்வகை பாக்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.
எனவே சென்னை மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம், கடைகள், மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி, அபராதமும் விதித்து வருகின்றது.
எனவே, நமக்கு நன்கு தெரிந்த, கலப்படம் செய்யாத, நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி, தோசை மாவுகளை மட்டும் வாங்குங்கள். முன்பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் பாக்கெட் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்.