Search This Blog

29 January 2017

Do you know?

INTERESTING FACTS

No words in the English language rhyme with “month”, “orange”, “silver” or “purple”.

“Hungry” and “Angry” are the only words in the English language that end in “-gry.

The number 4 is the only number that has the same number of letters in it - FOUR

Did you know the word 'Underground' is the only word that begins and ends with the letters 'und'.

The word 'Uncopyrightable' is the is the only 15 letter word that can be spelled without repeating any letter.

The word 'Typewriter' is the longest word that can be typed using only the top row of a keyboard.

Did you know the sentence "The quick brown fox jumps over the lazy dog" uses every letter in the English alphabet. *(Pack my box with five dozen Liquor jugs - all 26 English alphabeticals)*

The word 'Rhythm' is the longest word without a vowel.

"Dreamt" is the only word that ends in mt.

Did you know there are only 3 sets of letters on a keyboard which are in alphabetical order - 'F G H', 'J K L', 'O P'  

*"queue"*
The word "queue" is the only word in the English Language that is still pronounced the same way when the last four letters are removed.

"Dammit I'm mad" is the same spelt backwards
"Set" of all the words in the English Language, the word "set" has the most definitions.

"Bookkeeper" & "Bookkeeping" are only words in English language with three consecutive double letters.

The least used letter in the alphabet is Q.

The most commonly used word in English conversation is 'I'.

The dot on top of the letter 'i' is called a tittle.

There are only 4 words in the English language which end in 'dous' (they are: hazardous, horrendous, stupendous and tremendous)

The oldest word in the English language is 'town'.

The word 'Strengths' is the longest word in the English language with just one vowel.

The past tense for the English word 'dare' is 'durst'.

The first English dictionary was written in 1755.

17 January 2017

தாயின் புலம்பல் கவிதை

எனதருமை மகனே !

எனதருமை மகனே !

நான்

உன்னை

மிகவும் நேசிக்கிறேன்..


முதுமையின் வாசலில் - நான்

முதலடி வைக்கையில்

தள்ளாட்டம்

என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்...

கொஞ்சம் பொறுமை கொள்க !

அதிகம் புரிந்து கொள்க !


என்முதுமை பார்த்து

முகம் சுளிக்காதே !

நான்

சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?

சத்தம் போடாதே.....

உனக்கு நான்

நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு

கூர்க !


ஆடை மாற்றுகையில்

அவதிப் படுகிறேனா?

அசுத்தம் செய்து விட்டேனா?

ஆத்திரப்படாதே.....

படுக்கை முழுதும்

நீ பண்ணிய ஈரங்களின்

ஈர நினைவுகளை

இதயம் கொள்க !


ஒரே பேச்சை, தேய்ந்த

ஒலிநாடா போல்

ஓயாமல் சொல்கிறேனா?

சலித்துக் கொள்ளாதே....

ஒரே

மாயாவி கதையை

ஒரு நூறு முறை

எனை படிக்கச் சொல்லி

நீ

உறங்கிய

இரவுகளை ஞாபகம்

கொள்க !


நான் குளிக்க மறுக்கிறேனா?

சோம்பேறித்தனம் என்று

சுடுசொல் வீசாதே....

உன்னை

குளிக்க வைக்க

நான் செய்த யுக்திகளை

எனக்காக புதுப்பித்துத் தருக!

புதிய தொழில்நுட்பம்,

புதிய பயன்பாடுகள் - உன்

புயல் வேகப் புரிந்துகொளல்

சத்தியமாய் எனக்குச்

சாத்தியமில்லை !

கேவலப் படுத்தாதே....

கற்றுத் தருக ! கவனித்துப்

பழக அவகாசம் தருக !


இனி,

சில நேரங்களில் -

என்

நினைவுப் பிரழ்ச்சியால்

ஞாபங்கள் அறுந்து போகலாம்,

உரையாடல் உடைந்து போகலாம்!

நிறைய வேலை இருக்கிறதென்று

நேரம் பார்க்காதே.....

என் அருகிருந்து

ஆற்றாமை தேற்றுக!

ஆசுவாசப் படுத்துக!


என் கால்கள்

என்னை ஏமாற்றுகையில்

நீ

முதல் நடை பழக

என் விரல்

நீண்டது போல்

கைகொடுத்து

எனக்கு உதவி செய்க !


ஒரு நாள் சொல்வேன் நான்,

வாழ்ந்தது

போதுமென்று !

வருத்தப் படாதே.....

சில

வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...

சில

வயதுக்கு மேல்

வாழ்வதில் அர்த்தமில்லை...

காலம்

வரும்போது - இதை

நீயும்

புரிந்து கொள்வாய் !


இனி நான் வேண்டுவதெல்லாம்

நீ எனை

புரிந்து கொண்ட

புன்னகை !


மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !

எனதருமை மகனே !

நான் உன்னை

மிகவும் நேசிக்கிறேன்.....

என் வாழ்வு

அமைதியோடும் - உன்

அரவணைப்போடும்

முற்று பெற

முயற்சியேனும் செய்வாயா?

13 January 2017

ஞானம்

������������������������
    *ஒரு குட்டி கதை*
            
அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.
                அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.
                நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது . இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.
             மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார் .
" இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி . இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான்.  இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள்  உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் . தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள் . அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் .  உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.
                மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
                தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் . பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும். அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும் . இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும் , மீன்களும் போதுமானதாக இருக்கும். ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.
               அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில்     விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள்.  இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.
            நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது.  படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.
               அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான் ,
" தலைவா , எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.
             தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது . இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .
               இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது. ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு. இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.
             கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.
அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான்.  தலைவரை வணங்கி வரவேற்றான்.
          " உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.
" உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே . நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.
           " கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே " என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அவன் சொன்னான் ,
" தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல . இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.
             தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
" நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன் . நீயோ உன் அறிவாலும் , உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய் . *_காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார்._*

*கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே* *ஜெயிக்கிறார்கள். அது பொருளாக இருந்தாலும் , வாழ்க்கையானாலும்.....

12 January 2017

Screen lock

*போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்*
��நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம்.
��அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான். போனில் உள்ள contact- ல் group என்ற option இருக்கும்.
��அதை open செய்து அதில் ICE emergency contact-ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் எண்களை save செய்து வைத்து கொள்ளுங்கள்.
��உங்கள் போன் lock-ல் இருக்கும் போது lock-ன் கீழே emergency calls-ஐ click செய்தால் நீங்கள் save செய்து வைத்து இருக்கும் எண்கள் வரும்.
��அந்த எண்ணிற்கு அந்த போனில் இருந்தே call செய்ய முடியும்.
��இதை தெரிந்து வைப்பதோடு இதை உங்கள் போனில் செய்து கொள்ளுங்கள்.
��அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்.
��இது முற்றிலும் உண்மையான பதிவு.
��உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் எவருக்கேனும் பயன்படும்.
*அதிகமாக பகிரவும்*
      *����*

Life with mobile

_*Life with mobile*_
தினமும் செய்ய வேண்டியவை
1)  சோகத்தை ~ *Delete* செய்யுங்க
2)  சந்தோஷத்தை ~  *save*  செய்யுங்க
3)  சொந்தங்களை~ *recharge* செய்யுங்க
4)  நட்புகளை ~  *Download* செய்யுங்க
5)  எதிரிகளை ~  *Erase* செய்யுங்க
6)   உண்மையை ~  *Broadcast* செய்யுங்க
7)  துக்கத்தை ~  *switch off* செய்யுங்க
8)  வேதனையை ~  *Not reachable* செய்யுங்க
9)  பாசத்தை ~  *In coming* செய்யுங்க
10)  வெறுப்பை ~  *out going* செய்யுங்க
11)   சிரிப்பை ~ *In box* ல் வெய்யுங்க
12)  அழுகையை ~ *out box* ல் வெய்யுங்க
13)  கோபத்தை ~  *Hold* செய்யுங்க
14)  இன்முகத்தை ~  *send* செய்யுங்க
15)  உதவியை ~  *ok* செய்யுங்க
16)  இதயத்தை ~  *vibrate* செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் *Ring tone* சந்தோஷமாக ஒலிக்கும்
*Have a relaxing day everyday*

09 January 2017

Happiness

One is born in a first class hospital, the other is delivered at home, both survived.
One went to a private primary school and the other to a public school, both ended in the same high school.
One woke up from the bed and the other woke up on the floor, both had a peaceful sleep.
One has expensive attire, the other simple and cheap, both still cover their body.
One ate fried rice and Curry, the other ate home made rice n dal but both filled their hunger.
One drives a Lexus, the other uses public transport but both reached their destination.
One may be reading this post from a IPhone6+ and the other on an ordinary Smart phone, but all can see the same message.
Lifestyle is not a competition, various lanes lead to the same destination.
Just because our neighbour has amassed material posessions, it does not mean that we are a failure.
Happiness doesn't come from having everything, but making the best out of what we have, it's all about how we see ourselves.
Happiness is not having what we like. Happiness is liking what we have and learning to make the most of it by giving it3 Exclamation mark

Happiness is a state of mind !! In list

புத்திசாலித்தனமான கைதி


ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்... அவர்கள் இறக்கும் முன் ,  உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன .... ? 
என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியின் ஆசை:

நல்ல பெண், .....
நல்ல சாப்பாடு , ......
நல்ல மது , ..
லெனின் சமாதிக்கு ,  அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றன் ... அவனது மூன்று ஆசைகளும்,..... நிறைவேற்றப்பட்டன.

  இரண்டாவது கைதியின் ஆசைகள் ;

நல்ல பெண், ...
நல்ல உணவு, ....விளாடிமிர் லெனின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று ,கூறினான்... அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.

மூன்றாவது கைதி :

  தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான்......
அப்போது மாம்பழ ,
சீசன் இல்லை , எனவே.... தூக்கு தண்டனை ,...
ஆறு மாதகாலத்திற்கு ,..
ஒத்தி வைக்கப்பட்டது.

. ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து , ...இரண்டாவது  ஆசை என்ன .... ?என்று, கேட்டனர்....!

  செர்ரிப் பழம்  வேண்டும் என்று,பதில்வந்தது..... அப்போது , செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால்..... மறுபடியும் ,  தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் ... செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

இப்பொழுது ,.... மூன்றாவது  , ஆசை என்னவென்று... ! அவன் சொன்னான்,   ''என் உடல் ... தற்போதைய அதிபரின் , சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்..  என்று ,!!!

  ''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,  ..
நீ  ''என்ன சொல்கிறாய், ?  அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..

''கைதி அமைதியாகச் சொன்னான், ...    "அவர் இறக்கும் வரை .....  நான் ! காத்திருக்கிறேன்.' என்று . !

*நீதி :*
////////////////////////////////////

  *புத்திசாலி தன்னை எந்த தருணத்திலும். , பாதுகாத்துக்  கொள்கிறான்...*
###################

RLRLRLRLRLRLRL
((((((((((((((((((((((((((((((((((((((

அன்பு

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.

ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.

கேட்டபோது சொன்னாள்

“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்

“அன்பு என்றால் இதுதான்”.

ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அது போதும்..

எதையும் காயப்படுத்தாமல் இருப்போமே.

நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்..

ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்... ஆனால் உலகம்  அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...��

எச்சரிக்கை

ஒரு பெண் தன் சமையல்
அறையில் கியாஸ்
(Gas Stove ) அடுப்பில்
சமையல் செய்து கொண்டு
இருக்கும் போது பக்கத்தில்
பாத்திரம் கழுவும் இடத்தில் சில
கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்..

உடனே அவள்
பூச்சிக் கொல்லி ("Hit","Mortein") மருந்தை அடித்து தெளித்தாள்.

அந்த மருந்தின் வேகத்தால்
கியாஸ் சிலிண்டர் வெடித்து அவள் மேல் 65% தீக்காயம்
ஏற்பட்டது.

அவளைக் காப்பாற்ற முயன்ற
கணவர் மீதும்
தீக்காயம் ஏற்பட்டது.

இருவரும் மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்டனர்.

கணவர் தொடர்ந்து
சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் அந்த
பெண்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
இறந்து போனாள்.

அவள் இறந்தது கூட
கணவனுக்கு தெரியாது.

#எச்சரிக்கை��
##########

அதனால் எரிவாயு
எரிந்து கொண்டு இருக்கும் போது
பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டாம் என்று
எச்சரிக்கப் படுகிறது.

இந்த செய்தியை படித்ததோடு
விட்டுவிடாமல் மற்றவர்களும் தெரிந்து கொள்ள உங்கள் முகநூலிலோ (Facebook) அல்லது கட்சவை அஞ்சல் 
சேவையிலோ (Whats app) பரப்புங்கள்.
நன்றி.

Plz share this message����

08 January 2017

மறப்போம் மன்னிப்போம்

பழையதை
        மறப்போம்...����                                 
புதியதை
        நினப்போம்...����

கோபங்களை
   அகற்றுவோம்...�����

சந்தோஷசத்தினை
பகிர்ந்திடுவோம்...����

எதிரியை
    மன்னிப்போம்...������

நண்பனை
       நேசிப்போம்...����

தீயதை       விட்டொழிப்போம்...����

நல்லதை
    நினைப்போம்...��������

07 January 2017

நீங்க என்ன எண்ணெய் பயண்படுத்துறீங்க?

Very very important message. Please read till the end ....
“சரி .. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க…”

“எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…”

“மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”

“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”

“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது.  எண்ணெய்னால வரக்கூடியது…?”

“என்னாண்ணே சொல்றீங்க…?”

“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”

“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”

“ நீ மட்டும் இல்லை… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”

“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”

“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”

“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”

“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?

“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”

“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”(அது பேரு மினரல் ஆயில்)

“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”

“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க… அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”

“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”

“இல்லைண்ணே..”

“பாரு… உண்மை புரியும்…”

“ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”

“ லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”

“என்னா தெரியும்…”

“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”

“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”

“ சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”

”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”

“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”

“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”

“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..”

“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”

“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”

“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”

“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது… கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு…

“டேய் தம்பி..  போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…”

“இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை”

“ நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோ?

இந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தாலும் மற்றவர்களுக்கு அனுப்பியிருந்தாலும் பரவாயில்லை  மறுபடியும் அனுப்புங்க     4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பு இல்ல...... ��