Search This Blog

09 August 2016

நமது உடல்

�� நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

��ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

�� *விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்*.

இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

�� *விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்*.

காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

�� *காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்*.

இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

�� *காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்*.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

�� *முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்*.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

�� *பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்*.

இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

�� *பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்*.

நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

�� *மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்*.

பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

�� *இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்*.

பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

�� *இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர்* என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. *இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது*.

�� *இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்*.

இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

�� *இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்*.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

�� மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர். I

மெமரிகார்ட்

மெமரிகார்ட் பற்றிய சில
தகவல்கள் ? ? ?

☆★☆ இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்ய வேண்டும் ☆★☆

மெமரிகார்ட் என்றால்
Dataக்களை பதிந்து வைக்க
பயன்படும் ஒரு நினைவக
அட்டை என்றும் அது 4,8,16,32GB
என்ற அளவுகளில்
கிடைக்கிறது......!

இது மட்டும்தான்
நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன்
ஒரே அளவுள்ள மெமரிகார்ட்
(4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில்
விற்கப்பட வேண்டும் என
யாராவது சிந்தித்தீர்களா?

(வெல
கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்
பாஸ் அத
வச்சு ஆராய்ச்சி எல்லாம்
பன்னப்படாது )
என்று ஒரு போதும்
இருந்துவிடாதீர்கள்......!

ஏனென்றால்
நாம் டிஜிட்டல் உலகத்தில்
இருந்து கொண்டிக்கிறோம்
அதைப்பற்றிய அரிவை நாம்
பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க
வேண்டிய விஷயம்
என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய
தயாரிப்பு நிறுவனத்தின்
பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற
எதாவது ஒரு எண்
குறிப்பிட்டு அதில்
ஒரு வட்டமிட்டு காட்டப்
பட்டிருக்கும் இதுதான் இந்த
விலை பட்டியலுக்கு காரணம்
ஆனால் இதனை அதிகம் நபர்கள்
தெரிந்து வைத்திருப்பதில்
லை.......!

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள
எண் அந்த memory cardனுடைய
class என்று குறிப்பிடப்படுக
ிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின்
data transfer speedஐ குறிக்கும்
code ஆகும் 4என்ற எண்
எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால்
அது நொடிக்கு 4MB வேகத்தில்
fileஐ transfer செய்யும்
தன்மையை பெற்றிருக்கும்
class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற
வேகத்தில்
dataக்களை பரிமாறிக்கொள்கி
றது......!

இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படு
கிறது என்பது இதை விற்கும்
பல வியாபாரிகளுக்கே
தெரியாது.......!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

A/C போட்டு இரவில் தூங்குபவரா நீங்கள்? எச்சரிக்கை!


நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.

இதை வாத நோய்கள் என்பார்கள். பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார்.

ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.

ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும்.

இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும்.

வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும், தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.

அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது. தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது.

இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது. எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்ற அழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.

நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.

மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது.

மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.

இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது. மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது.

இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

07 August 2016

எது வேண்டும்

ஒரு *"ராஜா"* தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்.

திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்.
மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்.

ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது.

காட்டு வழியே வரும்போது
திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்.

மந்திரியும் காவலர்களும்
வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக்
கொண்டு நின்று விடுகிறார்கள்.

எங்கிருந்தோ *"ஆறு இளையர்கள்"* வந்து
அவர்களை காப்பாற்றுகிறார்கள்.

மந்திரியுடன் ஆறு இளையர்களும் *"ராஜாவிடம்"* வருகிறார்கள்.
*"ராஜாவும்"* மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,

”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்.
*"முதல்"* இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்.

*"இரண்டாவது"* இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்.

*"மூன்றாவது"* இளைஞன் தான் வசிக்கும்
கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்.

*"நான்காவது"* இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்.

*"ஐந்தாவது"* இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த
மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்.

அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன *"ராஜா"*,

*"ஆறாவது"* இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன
வேண்டும்” என்று கேட்கிறான்.
இளைஞன் சற்று
தயங்குகிறான்,

*"ராஜா"* மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,

"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்.

வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்.

*"ராஜாவும்"* இவ்வளவுதானா என்று முதலில் கேட்டான்.

பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை.

தெரிந்து கொண்டான்...
ஆம்.

*"ராஜா"* அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால்,

அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும்.

அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும்.

வேலைக்காரர்கள் வேண்டும்.

அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும்.

சொல்லப் போனால் முதல் *"ஐந்து"* இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும்.

என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,

என்று . . . ,

இந்தக் கதையை முடித்தார்
பேச்சாளர்.

இந்தக் கதையில் கூறிய *"ராஜாதான்"* அந்த *"இறைவன்"*.

பொதுவாக எல்லோரும்
*"இறைவனிடம்"* கதையில் கூறிய ,

முதல் *"ஐந்து"*
இளைஞர்களைப் போல்,

தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்.

கடைசி இளைஞனைப் போல் *"இறைவனே"* நம்மிடம் வர
வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் ,

மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.

01 August 2016

ஒரு குட்டிக் கதை!

ஆற்றங்கரைக்குத் தன் மகனை அழைத்துப் போயிருந்தார் ஒருவர். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.

“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார்.

மகன் நிரப்பி எடுத்து வந்தான். “இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றான்.

அப்பா கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். அதே பையில் போட்டுக் குலுக்கினார். அவை கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின. ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

“இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டான் மகன்.
தந்தை அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார். கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.

“இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?”

“இருந்திருக்காது” என்று ஒப்புக் கொண்டான் மகன்.

“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.

வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடு. அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். ஆனால், உன் சக்தியை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.”

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.....!!!

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.

"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.

பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,

வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.........!!!

பெற்றோரின் கவனத்திற்கு

பெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல் அவசியம் படியுங்கள் கட்டாயம் Share செய்யுங்கள்
○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○
1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல....