Search This Blog

30 August 2016

சீரக தண்ணீர்

சீரக தண்ணீர் செய்முறை:

குடம் (15) லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் தோராயமாக பாதி ஆறவைத்து அதில் ஒரே ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை போட்டு ஓர் குழி தட்டு போட்டு (வேர்த்து வடியும் நீர் தண்ணீரில் விழும்படியாக) முடிவைக்கவேண்டும். இந்த தண்ணீரை குடித்துவர வேண்டும். தினமும் புதியதாக செய்துக்கொள்ளவும்.

BP மற்றும் கொழுப்பு கட்டுக்குள் வரும்.

சமையலில் சீரகம் உபயோகிகின்றோமே தனியாக ஜீரக தண்ணீர் குடிக்கவேண்டுமா என்ற நியமான நினைப்பு ஏற்ப்படுவது இறக்கையே. மேற்கண்ட செயல்முறை விளக்கத்தில் சீரகம் மிதமான வெப்பத்திற்கு உட்ப்படுதப்படுவதை பார்க்கின்றோம், இதே சமையலில் பயன்படுத்தும்போது நமக்கு தேவையான மருத்துவ உட்ப்பொருள் (alkaloid) குழம்பு கொதிக்கும்போது ஆவியாகி வெளிப்பட்டுவிடும் என்பதே உண்மை. அதலால் நுணுக்கமரிந்து பயன்படுத்துவது நற்பலனளிக்கும்.

வாயு தொல்லை

பெரும்சப்தத்துடன் ஏப்பம் விடுபவர்களை காண முடிகிறது. நமக்கு அருவெறுப்பு, சிறிது கூட நாகரிகம் இல்லாமல் இப்படி பொது இடத்தில் ஏப்பம் விடுகிறாரே என்று. ஆனால் ஏப்பட்ம் விட்டவர் புத்திசாலி. ஆயுர்வேதத்தின் உபதேசங்களை நன்கு அறிந்திருக்ககக்கூடும். பெரும் சப்தத்துடன் விடுவது தவறுதான் என்றாலும் ஒரு இயற்கையான உபாதையை தடுக்காமல் ஏப்பத்தை நன்கு வெளியே விட்டுவிட்டதால் வாயுத் தொல்லைகள் அவருக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார். இதே நபர் வரும் ஏப்பத்தை தடுக்கக்கூடிய வழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கு கீழ்காணும் உபாதைகள் வரக்கூடும்.

1.ருசியின்மை 2. உடல்நடுக்கம்

3. ஹ்ருதயத்திலும், நெஞ்சிலும் வாயுப்பிடிப்பு

4. வாயுவினால் வயிறு பெருத்தல் 5. இருமல் 6. விக்கல்.

ஜீரகத்தை லேசாக வறுத்து (5 கிராம் அளவில்) கால் லிட்டர் தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, வெதுவெதுப்பாக சிறிய அளவில் அடிக்கடி பருக வேண்டும். ஆயுர்வேத மருந்து கடைகளில் தான் வந்திரம் குளிகை, வாயுகுளிகை என்று மாத்திரைகள் விற்கப்படுகின்றன, தான்வந்திரம் குளிகையை மேல் குறிப்பிட்ட ஜீரக ஜலத்துடன் 1 மாத்திரையை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தசமூலாரிஷ்டம் 1 அவுன்ஸ் அதாவது 25IL, 1 வாயு குளிகையுடன் காலை, இரவு -ஆஹாரத்திற்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருந்தை நாடாமல் இருக்க வேண்டுமாயின் ஏப்பத்தை தடுக்காமல் அதிக சத்தமில்லாமல் மெதுவாக விட்டு விடுவதே நல்லது.

நம் உடலில் புகும் தீய சக்திகளில் பெரும்பாலானாவை தண்ணீர் மூலமாகவே சேர்கின்றன. தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து அருந்தி வந்தால் நமது எண்ணங்கள் துõய்மையாகி ஆன்மீக முன்னேற்றம் துரிதம் அடையும். தண்ணீரில் சிறிது சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தோஷங்கள் அகலும்.

வாழ்க்கை

நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..??
இதை படிங்க..??

இதைப் படிப்பதால்.. உங்கள் வாழ்க்கை முறை.. கவலைகள் பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம்..!!

* உண்ண உணவும்.. உடுத்த உடையும்.. வசிக்க இடமும் உனக்கு இருந்தால்.. உலகில் உள்ள 75% மக்களை விட.. நீ வசதி பெற்றிருக்கிறாய்..!!

* வங்கியில் பணமிருந்தால்.. அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள்.. நீயும் ஒருவன்..!! உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை..!!

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால்.. நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற.. 1% மனிதர்களுள் ஒருவன்..!!
நினைத்த நேரத்தில்.. நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும்.. 175 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

*நோயின்றி காலையில்.. புத்துணர்வுடன் நீ எழுந்தால்.. அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே.. உயிர் துறந்த பலரை விட.. நீ பாக்கியசாலி..!!

* பார்வையும்,, செவித் திறன்,, வாய் பேசாமை.. உள்ளிட்ட எந்த குறைபாடுகளும்.. இல்லாது நீ இருந்தால்.. அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்..!!

* போர்,, பட்டினி,, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால்.. உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்..!!

*கொடுமைகளுக்கு உள்ளாகாமல்.. நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால்.. உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்..!!

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால்.. நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு.. உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா..?
அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்..!!
ஏனெனில் உலகம் முழுதும்.. சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு.. பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை..!!

* கல்வி அறிவு பெற்று.. இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால்.. அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்..!!
உலக அளவில் எழுத படிக்க தெரியாத.. மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்..!!

* இணையத்தில் இந்த செய்தியை.. உன்னால் படிக்க முடிந்தால்.. அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால்.. அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும்.. நம்பிக்கையும் இல்லாதவர்களை விட.. நீ கொடுத்து வைத்தவன்..!!

* நீங்கள் அனுபவித்து வரும்.. வசதிகளையும்.. தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல்.. ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல்.. கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க.. ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு.. கொடுத்திருக்கும் போது.. நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??

* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!
வீண் கவலைகளை விட்டு.. அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள்.. போதை பொருட்கள்.. என்பவற்றை விட்டு.. விட்டு
நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு.. இயன்றவரை மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த வரை உதவுங்கள்..!!
உங்கள் வாழ்க்கை மேலும் அழகாகும்..!!

29 August 2016

தன்னம்பிக்கை

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பதுநல்லது” என்றுபல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்தஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்…..!
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்தகடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்……
அதில் இப்படி எழுதியிருந்தது“மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்” என்று……“இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்” பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது “தாயாலேயே” மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று.
தன்பிள்ளைகள் மீதான “உயர்வான எண்ணங்கள்” அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்..!
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..

27 August 2016

சின்ன சின்ன தகவல்கள்

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சு விடவும், முழுங்கவும் முடியும்..
புதுப் பேனாவை எழுதக் கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
தர்பூசணியைத் தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
கனடா நாட்டவர், தங்களின் புகைப்படத்தை தபால் முத்திரையாகப் பயன்படுத்த முடியும்.
8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.
திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
எல்லாருடைய நாக்கு ரேகைகளும் கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான்.
சுவீடனில், ஒரு ஹோட்டல் ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.
பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டகச் சிவிங்கி மட்டும் தான் வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
பெரும்பாலான கைக்கடிகாரம் விளம்பரத்தில் காட்டப்படும் 10:10 என்ற நேரம் புன்னகையைக் குறிக்கும்.
நீல நிறம், மக்களை அமைதியடையச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயனத்தை அமைதியாக வைத்திருப்பதற்காகச் சுரக்கின்றது.
லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.
15 எழுத்து ஆங்கில வார்த்தை, ஒருமுறை வந்த எழுத்து திரும்ப வராத வார்த்தை: uncopyrightable
குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.
வறுக்காத முந்திரிக் கொட்டை விஷத் தன்மை உடையது.
சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.
கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்..

அனுதினம் ரசம் ஆரோக்யம் வசம்

              ரசம் என்னும் சூப்பர் திரவம் பற்றி ஒரு அலசல்.

ரசம் என்னும் சூப்பர் திரவம் பற்றி ஒரு அலசல் { சமையலறை }

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும்.

இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

பல நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம்.

வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர்.

இது, ரசத்தின் மறுவடிவமே.

ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது.

வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது.

மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.

நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன.

அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது.

புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.

உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன.

கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.

வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது.

கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது.

தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன.

மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.

ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.

தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.

வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

மழைக்காலத்தில்  உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம்.

வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

26 August 2016

Bread

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.

"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''

"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.

"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.

"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''

""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''

""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.

பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்.

ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.

25 August 2016

Message

*Excellent Inspiring Message:*

A Businessman who lost everything in a fire
placed a Sign Board:

"Everything burnt but luckily
faith & confidence
undamaged.
Business starts tomorrow."

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

*Superb Attitude for Life!!*

Someone asked Life:
Why are you so difficult???
Life Smiled and said
"You people never appreciate easy things"

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Forgive others, not because they deserve forgiveness,
but because *you �� deserve peace... ��*

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

*Unbelievable fact!!*
Our body is full of water but wherever it hurts,
BLOOD comes out.
& Our heart is full of blood but whenever it hurts,
TEARS comes out...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

If you have a *"Magnetic"* personality and yet people don't get attracted to you, it's not your fault...
They have "IRON" deficiency in their bodies....

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

*Coolest msg....*
"If we sleep on flowers ,
its called our First Night"
"If flowers sleep on us, its called our Last Night"
Reality of life.....

19 August 2016

அறிவியல்

சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில்,  'அம்மா’ என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே, 'ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!’ என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை.

'வானம் வடக்கே கருக்கலா இருக்கு மழை வருமாட்டு இருக்கு மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

'ஆடிப் பட்டம் தேடி விதை’ என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை.

'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

'செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்’ எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு, 60 ஆடுகளில் இரண்டை மட் டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்? அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்? இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?  ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு. வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும், பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்துவருகிறோம்.

'மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும், க்ரீன் சட்னி வைக்காதே சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது, 'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’ எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது. ஏனென்றால், சொல்லித் தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை. இந்த மௌனங்களும் அவசரங்களும் தொலைத்தவைதான் அந்த அனுபவப் பாடம்!

தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து 'புரோட்டின், கலோரி, விட்டமின்’ பற்றிய ஞானம் பெருகிய அளவுக்கு,  'கொள்ளும் கோழிக் கறியும் உடம்புக்குச் சூடு; எள்ளும் சுரைக் காயும் குளிர்ச்சி. பலாப் பழம் மாந்தம். பச்சைப் பழம் கபம். புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்’ என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

'அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது இந்த தெர்மாமீட்டர்ல உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை, வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு?
'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’ எனும் அம்மா, 'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று அக்கறை காட்டும் அப்பா.

'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.

'வயிறு உப்புசமா இருக்கா? மாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணிவிட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.

ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது, வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.

'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே? குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக் கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.

வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற  பொருள் நச்சுத்தன்மைக்கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக் கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா? 'பிள்ளை-வளர்ப்பான்’!

'சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க. மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;

பித்தக் கிறுகிறுப்புக்கு முருங்கைக்காய் சூப்,
மூட்டு வலிக்கு முடக்கத் தான் அடை,
மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி,
குழந்தை கால்வலிக்கு ராகிப் புட்டு,
வயசுப் பெண் சோகைக்குக் கம்பஞ்சோறு,
வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு வாழைத்தண்டுப் பச்சடி’ என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும் சில நேரம் மருந்துகள்; பல நேரம் மருத்துவ உணவுகள்.

காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

சுழியத்தைக் (ஜீரோவை) கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

'பை’ என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

'ஆறறிவதுவே அதனொடு மனமே’ என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன தொல் காப்பியம் எழுதிய ஊர

இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?