ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பதுநல்லது” என்றுபல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்தஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்…..!
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்தகடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்……
அதில் இப்படி எழுதியிருந்தது“மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்” என்று……“இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்” பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது “தாயாலேயே” மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று.
தன்பிள்ளைகள் மீதான “உயர்வான எண்ணங்கள்” அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்..!
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..
Search This Blog
29 August 2016
தன்னம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment