சில யதார்த்த உண்மைகளை இங்கே
குறிப்பிட்டுள்ளேன்.. படித்து,
உணர்ந்து, மற்றவர்களிடமும்
உணர்த்துங்கள்...
1--நாம் நமது குழந்தைகளின் எதிர்காலம், கல்வி, கல்யாணம் போன்றவைகளுக்காக தங்கம் வாங்குவோம், ஆனால் அவர்கள்
எதிர்காலத்துக்காக, என்றும் தங்கமாக தங்கும் ஒரு குழந்தைகள்
பாலிசி எடுக்க யோசிப்போம்..
2-- இன்ஷூரன்ஸ் முகவரைக் கண்டால்,
பயப்படுகிறோமே தவிர, அவர் நமது
நல் வாழ்விற்காக, நம்மை பாதுகாக்கும்
நல்ல திட்டங்களை சொல்பவர் என்ற
எண்ணம் மட்டும் வருவதில்லை.
3---பல ஆயிரங்கள் மதிப்புள்ள
நமது மொபைலுக்கு screen guard
வாங்கி அதை காப்பாற்ற நினைக்கும்
நாம், பல கோடி மதிப்புள்ள நமது
ஆயுள் மீது இன்ஷூரன்ஸ் எடுக்கத்
தயங்குகிறோம்..
4---நமது காலணியை பாதுகாக்க
5 அல்லது 10 ரூ கொடுக்கிறோம்..
ஆனால் நமது ஆயுள் மீது காப்பீடு
எடுக்க ஒரு நாளைக்கு 50 ரூ கூட
கொடுக்கத் தயங்குகிறோம்.
நம்ம வாழ்க்கைக்கு கொடுக்கற
முக்கியத்துவம் இவ்வளவுதானா?
5---அரசாங்க ஊழியர்களுக்கு
ஓய்வூதியம் இருப்பதைப் பார்த்து
ஏங்குகிறோம்.. ஆனால் நமக்கும்
ஓய்வூதியம் வேண்டும் என்ற
ஏக்கத்தை ஒரு பாலிசி எடுப்பதன்
மூலம் வழிவகை செய்ய யோசிக்கிறோம்..
6---மின்சாரம் போய்விட்டால்,
வீட்டில் வெளிச்சம் வேண்டும் என்ற
முன்னெச்சரிக்கையில் இன்வெர்ட்டர்
வாங்கி வைக்கிறோம்... ஆனால்
குடும்ப வெளிச்சம் உங்களை
நம்பித்தான்.. உங்கள் குடும்பத்தில்
என்றும் வெளிச்சம் வர இன்ஷூரன்ஸ்
என்ற இன்வெர்ட்டர் அவசியம் என்பதை
உணர மறுக்கிறீர்கள்.
7---நமது உயிருக்கும் மேலான நமது
மகளை அதுவரை அறிந்திராத
நபருக்கு மணமுடிக்க தயங்குவதில்லை... ஆனால் நமக்கு நன்கு அறிமுகமான
முகவர் நமது நன்மைக்காக எடுக்கச்
சொல்லும் காப்பீட்டு பற்றி மிகவும்
தயங்குகிறோம்.. ஏன்?
8--எதிர்காலம் எப்படி இருக்கும் என்று
சாமியார்கள், ஜோதிடர்கள் சொல்வதை " Magic" போல நம்புகிறோம்.. ஆனால்
"logic" க்காக நமது முகவர் சொல்லும்
உண்மையான விஷயங்களை ஏற்க
மறுக்கிறோம்.
9---என் மதம், என் கடவுள், என் சாதி
என்று ஒருவொருக்கொருவர்
சண்டையிடுகிறோம்.. ஆனால்
இறப்பு என்பது எல்லோருக்கும்
எப்ப வேணும்னாலும்
வரும் விதி என்பதை மறக்கிறோம்.
10---குடும்பத் தலைவர் திடீரென
இறந்தால், அவருக்கு மட்டும் அல்ல,
அவர் வாங்கிய சம்பளம் கடைசி என்பது.. அவரது குடும்பத்தினர்க்கும்... ஆனால்
அவர்கள் மறுநாள் முதல் அன்றாடம்
வாழ்ந்தாக வேண்டும்.. உங்கள்
ஆயுள் காப்பீடு மட்டுமே,
உங்கள் இழப்பை ஈடு செய்ய உதவும்.
11--உங்கள் வங்கி கணக்கில் பேலன்ஸ்
எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும்..
உங்கள் மொபைல் கார்டில் பேலன்ஸ்
எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும்.
உங்கள் வாழ்க்கை கார்டில்
எவ்வளவு பேலன்ஸ் என்று
யாருக்குத் தெரியும்?
ஆயுள் காப்பீடு கொண்டு
ரீசார்ஜ் செய்வதே உன்னதம்.
ஆயுள் காப்பீடு பயந்து
எடுக்க வேண்டாம்...
ஆயுள் காப்பீடு விரும்பி
எடுக்க வேண்டும்..
ஆம்..
உங்கள் குடும்பத்தை
விரும்பி, அன்பினால்
எடுக்க வேண்டும்..
நாங்கள் கட்டாயப் படுத்தி
எடுப்பதல்ல,
நீங்கள் கட்டாயமாக
எடுப்பது.
அன்பின் சின்னம்
ஆயுள் இன்ஷூரன்ஸ்.
வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment