Search This Blog

23 July 2016

*உறவுகள் மேம்பட A to Z*

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

01 July 2016

சினம் ஒரு சங்கிலி


ஒரு குடும்பத்தலைவனுக்கு அடிக்கடி சினம் வருகிறதென்று வைத்துக் கொள்வோம். அவனது மனைவி, மக்கள், மனநிலைகள் அதனால் பாதிக்கப்படும். அவர்கள் சோகம் கப்பிய முகத்தினராவார்கள். அவர்களது மனவலிமை குன்றிப் போகும். தோல்வி – மனப்பன்மை அவர்களிடத்தில் தோன்றும். மறைவாகத் தீங்கும் செய்யும் குணமுடையவர் ஆவார்கள். அவர்களும் சிடுமூஞ்சிகளானாலும் ஆவார்கள். எளிதில் சினம் வயப்படும் பலவீனத்தையும் அவர்கள் பெற்று விடுவார்கள். அம்மட்டோடு போகுமா, போகாது; சினம் ஒரு சங்கிலி போன்றது. தொற்று நோய் போன்றதென்றும் சொல்லலாம்.

ஒரு அதிகாரியின் வீட்டுக் குழந்தை அதன் தாயாருக்குத் தன் பிடிவாதப் போக்கினால் கோபமூட்டுகிறது. அதன் விளைவினால் அந்த அம்மாள் தன் கணவனிடம் எரிந்து விழுகிறாள். அந்த அதிகாரி இந்தக் கோபத்துடன் தன் அலுவலகத்திற்குச் சென்று தன் பணியாளரிடம் சிடுசிடுவெனப் பேசுகிறார். மனம் புண்பட்ட பணியாளர் வீட்டுக்குப் போய்த் தன் மனைவியிடம் காரணமில்லாமல் கோபித்துக் கொள்கிறார். அந்த அம்மாள் உள்ளக் குமுறலுடன் இருக்கும் சமயம் அவள் குழந்தை வந்து ஏதோ கொடுக்கும்படி அவளை நச்சரிக்கிறது. அவள் ஆத்திரம் தீர அந்தக் குழந்தையை அடித்து விடுகிறாள். இப்படிச் சினமானது சங்கிலித் தொடர் போலச் சென்று பலருக்கும் துன்பத்தை விளைவிக்கும்.

சினமானது பிறரை எவ்வாறு துன்புறுத்துகின்றதெனப் பார்ப்போம். சொந்த மகன், மகள், வாழ்க்கைத் துணை என்று வைத்துக் கொள்வோம். சினம் எழும் போது அவர்கள் மனம் என்ன பாடுபடுகின்றது என்பதை நாம் உணர வேண்டும். பிறர் நம் மீது சினம் கொள்ளும்போது நம் மனம் எவ்வாறு நோகின்றது, வருந்துகிறது. என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதுபோன்று தானே பிறர்மேல் நாம் கொள்ளும் சினம் அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் என்று கண்டுகொண்டால், நம்மோடு ஒத்த உறவினர், நமக்கு நலம் செய்பவர்களை இப்படி வருந்தவிடுவது நல்ல தன்று என்று தெளிவாகும். எனவே அதைத் தவிர்க்கத் தான் வேண்டும்.
அது மாத்திரமன்று, ஒருவர் மீது சினம் கொண்டால் அது ஒரு அவமதிப்பும் கூட. ஒருவர் மீது சினம் கொள்ளும்போது அவர்கள்படும் வருத்தம் ஒரு சாபமாகவே மாறுகிறது. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது பிறரை எவ்வாறு சினம் பாதிக்கிறது என்பது நன்றாக உங்களுக்குத் தெரியவரும்.

சமூக (க)வலைத் தளம்

சமூக (க)வலைத் தளம்: ஆண்-பெண் இரு பாலருக்கும்

1) ஆணோ, பெண்ணோ முகநூலில் உங்களது மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை தேவை இல்லாமல் பதிவிட வேண்டாம்.

2) தெரியாத நபர்களின் புகைப்படத்திற்கு Like, Comment, Share பண்ண வேண்டாம்.

3) ஆணோ, பெண்ணோ தெரியாத நபரிடம் தேவை இல்லாமல் சாட் செய்ய வேண்டாம். பிரச்சினையின் ஆரம்பமே இங்குதான்.

4) யாரை நம்பியும் புகைப்படத்தை அனுப்ப வேண்டாம். யாரிடமும் நீங்கள் புகைப்படத்தை கேட்கவும் வேண்டாம்.

5) நீங்கள் புகைப்படம் அனுப்பும் நபர் உங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும், அவரது கவன குறைவின் காரணமாக அவரிடம் இருந்து உங்கள் புகைப்படம் கயவர்கள் கையில் செல்ல வாய்ப்பு உண்டு என்பதனை மறந்து விட வேண்டாம்.

6) யாரும் உங்களை மிரட்டினால் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப் படுத்துங்கள்.

7) ஆண்கள், பெண்கள் பெயரில் போலியாக ID உருவாக்கி, ஆண்களையும், பெண்களையும் ஏமாற்றலாம்.

8) முகநூலில் உங்கள் தொலைபேசி எண், மின் அஞ்சல், பிறந்த தேதி மற்றும் சொந்த ஊர், படித்த கல்லூரி போன்ற தகவல்களை பிறர் பார்ப்பதை போதுமான வரை தவிர்க்கவும்.

9) சமூக வலைத்தளங்களில் அண்ணா, தம்பி, அக்கா தங்கை போன்ற உறவு முறைகளை வைத்து தெரியாதவரிடம் பழகுவதை கூடுமான வரை தவிருங்கள். எங்கும் ஒரு இடை வெளி வைத்து கொள்ளுங்கள்.

10) தெரியாதவரிடம், உங்களது அந்தரங்க விஷயங்களை, குடும்ப பிரச்சினைகளை கூறாதீர்கள், அதே போல் அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள்.

11) ஆபாச புகைப்படங்களை கொண்ட இணைப்புகள் வந்தால் அதனுள் போக வேண்டாம். அவ்வாறு சென்றால் அந்த இணைப்பு உங்களின் நண்பர்களுக்கு உங்கள் பெயரில் சென்று உங்களின் நன் மதிப்பு கெடும்.

12) உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களின் பெயரில் தேவை இல்லாத பதிவோ அல்லது செய்தியோ வந்தால் அவரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.

13) இத்தகைய தொழில் நுட்பங்களை உங்களின் முன்னேற்றத்திற்கு மட்டும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

14) Facebook ,what's app Hack பண்ணுவது மிக மிக எளிது. உங்க mobile நீங்க lock பண்ணிருந்தாலும்hack பண்ணலாம்.

15) free recharge னு# லிங்வந்தால் அதுல போகதீங்க ஈசியா உங்க all photos dataஅவங்களுக்கு போயிடும்.

16) உங்க mobile memory space இருந்தும் நீங்க 3g network .இருந்தும் உங்க மொபைல் டக்குனு சூடு ஆனாளோ,ஹாங் ஆனாலோ உங்க தரவுகளை யாரோ திருடுறாங்கனு அர்த்தம். உடனே mobile data off பண்ணிட்டு சிம் கார்டை கழட்டிருங்க.

17) உங்க போன் ‪#‎ரிப்பேர்என்றால்‬ அந்தரங்க போட்டோ இருந்தால்,இதற்கு முன் எடுத்து அழித்திருந்தாலும் தயவு செய்து ரிப்பேர்க்கு கொடுக்க வேண்டாம் போனால் போகட்டும் என்று விட்டு விடுங்கள் .அழித்த தகவல்களை திரும்ப பெறலாம்.

18) தனியார் பிரௌசிங் சென்டர்களில் உங்களது முக நூலையோ, மின் அஞ்சலையோ பயன்படுத்தினாலோ, அல்லது உங்கள் புகைப்படங்கள், பயண சீட்டுகள் மற்றும் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தாலோ அதனை அந்த கணினியில் இருந்து நீக்கி விட்டோமா என்பதனை நன்கு உறுதி செய்து கொண்டு வெளிய வாருங்கள்.

19) படிப்பு, போட்டி தேர்வு சம்பந்தமாக ஏதுனும் குழுவில் இருந்தால், அந்த வேலையை மட்டும் பாருங்கள், தேவை இல்லாத விஷயங்களை தவிருங்கள்.

20) மேற்கண்டவாறு நீங்கள் நடந்தால், சில நல்லவர்களை விட்டு நீங்கள் விலகி செல்லலாம், பரவாக இல்லை. ஆனால் கண்டிப்பாக தீயவர்களிடம் நெருங்க மாட்டீர்கள்..

மன அழுத்தம் இன்றி வாழ

மன அழுத்தம் இன்றி வாழ மிகச்சிறந்த சில வழி முறைகள்.!
��������������������

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி , டீ அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் அதிக நேரம் பழகுங்கள் .

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தைத்தரும்.

* ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

* எழுதப் பழகுங்கள்.
கவலைகளை,
எரிச்சல்களை,
தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள்.
வெளியே செல்வது,
கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்..
��������������������
*நல்லதே நடக்கும்*
*வாழ்க வளமுடன்*

21 June 2016

Brain Blasters

���� Tricky Questions and equally witty Answers given by Candidates. ( Many of them are IAS Officers now)

❓Q. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
✅A. Concrete floors are very hard to crack! (UPSC Topper)
---------------------------
❓Q. If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it?
✅A. No time at all its already built. (UPSC 23 rd Rank Opted for IFS)
---------------------------
❓QHow many birthdays does the average Japanese woman have?
✅A. Just one. All the others are anniversaries.
---------------------------
❓Q. If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
✅A. Very large hands. (UPSC 11 Rank Opted for IPS)
---------------------------
❓Q. How can you lift an elephant with one hand?
✅A.. It is not a problem, since you will never find an elephant with one hand. . (UPSC Rank 14 Opted for IES)
---------------------------
❓Q. How can a man go eight days without sleep?
✅A. He sleeps at night. . (UPSC IAS Rank 98)
---------------------------

❓Q. Why it is impossible to send a telegram to Washington today ?
✅A.. Because he is dead.
---------------------------
❓Q. If you throw a blue stone into the red sea what will it become ?
✅A. It becomes wet. (UPSC IAS Rank 2)
---------------------------
❓Q. What often falls but never gets hurt ?
✅A. Rain
---------------------------
❓Q. What is that no man ever saw which never was but always will be?
✅A. TOMORROW
---------------------------
❓Q.What looks like half apple?
✅A. The other half. (UPSC - IAS Topper)
---------------------------
❓Q. What can you never eat at breakfast?
✅A. Dinner.
---------------------------
❓Q. What gets wet while drying?
✅A. A towel.
---------------------------
❓Q. What 3 letters change a girl into a woman ?
✅A. AGE.
---------------------------
❓Q. What happened when wheel was invented ?
✅A. It caused a revolution.
---------------------------
❓Q. How is it easy to weigh a fish?
✅A. Because it has its own scales.
---------------------------
❓Q. Why does a bike rest on its leg?         ✅A. Because it is too tyred.
---------------------------
❓Q. Bay of Bengal is in which state?
✅A. liquid (UPSC 33Rank)
-----------����--------
Real brain blasters.

11 June 2016

உன்னால் முடியும்

��விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு ����
��
����தோற்றால் புலம்பாதே . . .
போராடு ����
��
���� கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு ����
��
����தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு ����
��
����நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி����
��
����ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் ����
��
����நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை ����
��
����கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு ����
��
���� உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு ����
��
���� கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு ����
��
����மொத்தத்தில் நீ பலமாவாய் ����
��
����சித்தத்தில் நீ பக்குவமாவாய் ����
����������������
��உன்னால் முடியும் .��
��உயர முடியும் . . . ��
��உதவ முடியும் . . . ��
����������������
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜
❇❇❇❇❇❇❇
����உன்னை உயர்த்த நீ தான் ����. . . ⚜நம்பு⚜ . .
✳✳✳✳✳✳✳✳
���� உன்னை மாற்ற நீ தான் ����. . .���� முடிவெடு���� . . .
��
����நீயே பாறை��������.நீயே உளி . ����. .
��
����நீயே சிற்பி . . .நீயே செதுக்கு ����. . .
��
����நீயே விதை . . .நீயே விதைப்பாய் ����. . .
��
����நீயே வளர்வாய் ����. ����நீயே அனுபவிப்பாய் ����. . .
��
����நீயே நதி���� . . .���� நீயே ஓடு���� . . .
��
����நீயே வழி���� . . .���� நீயே பயணி���� . . .
��
����நீயே பலம் ����. . . ����நீயே சக்தி ����. . .
��
��நீயே ஜெயிப்பாய் ��
��எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே��������������

Bird Face