Search This Blog

31 July 2016

வரதட்சணை

நிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளின்
கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை
முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான்
கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி
வேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான்
நிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ
நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான்
இறைவன்.

இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன்
வேண்டுதலை இறைவனிடம் கூறினான். எந்த வேண்டுதல் என்னவென்றால் " என் மனைவிக்கு
ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை
வேண்டாம் " என்று வேண்டிக்கொண்டான்.

இறைவனும் அவனின் வேண்டுகோளை
நிறைவேற்றினான். உங்களது வேண்டுகோள்
என்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம்
வரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.
சுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின்
கனவில் இறைவன் தோன்றி தன வேண்டுகோளை
வைத்தான். அவன் மகன் திருமணத்தின் பொழுது
பெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை
கொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள
வேண்டும் என்றான் இறைவன். இதை கேட்டு
அதிர்ந்து போனான் அவன்.

பெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே
என்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையை
கொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என்
தலையில் சுமத்துகிறாயே இறைவா என்று
கதறினான்.

" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும் நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்
வேண்டும்

உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்
வேண்டும் " உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை
பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால்
ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி
பாரமானது ?

நீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை
பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில்
நியாயம் ?

"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும்
பெண் பிள்ளை பாரமாகத்தேரியாது ".

No comments:

Post a Comment