*மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி*
*குழந்தைகள் மீது அன்பும், பாசமும் கொண்ட அனைத்து பெற்றோர்களும் படிக்க வேண்டிய பதிவு:*
தடுப்பூசி திட்டத்தைப் பற்றி சரியாகத் தெரியாதவர்களால் பல தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தடுப்பூசி புறக்கணிப்பு இன்று சரியாக தோன்றலாம். ஆனால் மனிதகுல வளர்ச்சிக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
தடுப்பூசி எதற்கு??
*1920-களில் உலகில் கிருமிகள் தாக்கத்தால் உயிர்துறந்த/பாதிப்புக்குள்ளான உயிரினங்களின் எண்ணிக்கை அதிகம்.* [ *மனிதன், விலங்குகள்* (கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோமாரி நோயால் இறந்த மாடுகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம்) *உட்பட]*. அப்போதெல்லாம் உலகில் வாழக்கூடிய உயிரினங்களின் சராசரி வயது மிகவும் குறைவு.
*விஷக்கிருமிகளின் தாக்கத்தைக் குறைக்க அப்போது ஒரு மருத்துவ அறிஞன் போராட்டம் கொண்டான். கிருமிகளை வீழ்த்தி, அதில் வெற்றியும் கண்டான்.*
*நோய் வருவதற்கு முன்பே நம் உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க* மருத்துவ அறிவியலால் மனித குலத்திற்கு தரப்பட்ட வரப்பிரசாதமே *தடுப்பூசி*
*நம் உடலைத் தாக்கும் கிருமிகளை, எதிர்கொள்ள நம் உடலை தயார்படுத்தவே* இந்த தடுப்பூசிகள் உதவுகின்றன. *கிருமிகளால் ஏற்படும் உயிர் சேதத்தையும், பக்க விளைவுகளையும் தடுக்கவே* அவை தேவைப்படுகின்றன.
*எடுத்துக்காட்டு*
*--------------------*
உலகெங்கும் பல்வேறு மனித உயிர்களை பலி வாங்கிய பெரியம்மை (small pox) நோய்க்கான விஷக்கிருமி 1986-ஆம் ஆண்டு இந்த உலகை விட்டே விரட்டப்பட்டிருக்கிறது.
*பெரியம்மை (Small pox) என்ற அந்த கொடிய உயிர்க்கொல்லி நோயை கண்ணாலும் காண முடியாத ஒரு காட்சிப் பொருளாக பெரியம்மை (small pox) தடுப்பூசி தான் மாற்றியது.*
*மீசல்ஸ்-ரூபெல்லா எதனால் அவசியம்*
*------------------------------------*
ஒரு காலத்தில் தட்டம்மையால் மட்டுமே இந்தியாவில் பாதிப்பு அதிகமென நினைத்து, *(அரசின் செலவினங்களைக் குறைக்க)* அதற்கான தடுப்பூசியை மட்டும் அரசு அறிமுகப்படுத்தியது. அதை 9-வது மாதமும், 15-வது மாதமும் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு போடப்பட்டு வந்தது.
ஆனால்
இன்று பள்ளிகளில் மருத்துவர்கள் சோதனையிட வரும்போது தான் ரூபெல்லாவின் தாக்கத்தை உணர
முடிந்தது.
சிலருக்கு பிறவியிலேயே *கேட்ராக்ட் எனப்படும் பொறைவிழுதலால், கண்பார்வை இழப்பு நேர்ந்துள்ளது* கண்டறியப்பட்டுள்ளது.
*மேலும் குழந்தையின்மைக்கான பல்வேறு காரணங்களுள், கருவிலேயே ரூபெல்லா நோயால் தாக்கப்பட்டதும் ஒரு காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.*
எனவே வருங்கால சந்ததியினரையும் காக்கும் வகையில், பெண்குழந்தையினருக்கு இதை அவசியம் போட வேண்டிய கட்டாயத்தை அரசு உணர தொடங்கியது.
*மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசியால் பக்க விளைவு?*
*தடுப்பூசி போடப்படும் பல இலட்ச குழந்தைகளுள் ஒரு சிலருக்கு தலைவலி போன்ற* சிறிய அளவிலான தொந்தரவுகள் தோன்றி மறையும்.
*மிகவும் எளிதாக பேசினால், மிகப்பெரிய மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை, முருங்கைத்தழை கூட நம் உடலில் சிறிதளவு பக்க விளைவை உண்டாக்கத்தான் செய்கின்றன.*
*எனவே தவறான வதந்திகளால், நம் எதிர்கால சந்ததிகளை ஏமாற்றாமல், மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசியை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போட்டு, குழந்தையின்மை, கண்பார்வையிழத்தல் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து நம் வருங்கால சந்ததியை பாதுகாப்போம். நன்றி*
No comments:
Post a Comment