Search This Blog

11 August 2017

குடும்பம்


Son : அம்மா...பசிக்குது. எதாச்சு குடு.
Mom : இந்தா உப்புமா...
Son : சீ... உப்மால்லாம் வேணாம்... அந்த ராகுலோட  அம்மா master chef ல வர்ற variety dishes லாம் பண்றாங்க நீயும் பண்ணலாம்ல???
Mom : Ok....would you like to have a portion of dry roasted semolina porridge
with boiled veggies
topped with roasted cashews served with pickle of your choice?
Son : Wow...! Sure..!
Mom : அதே தான் plate ல இருக்கு. மூடிட்டு சாப்பிடு....
------------------------------------------------------------------------------------------------------------------------
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
 --------------------------------------------------------------------------------------------------------------------------------
தின்னிப்பயலை பள்ளியிலே சேர்த்தது தப்பா போச்சு…!
ஏன்?
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற நகரம் எதுன்னு கேட்டால் ‘சட்னி’ன்னு சொல்றான்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------
என் மருமகளுக்கு ரொம்பதான் கொழுப்பு…!
ஏன் என்ன செஞ்சா?
நான் பாலை வெச்சுப் பால் கோவா பண்றேன்..
நீங்க ரசத்தை வெச்சு ரசுகுல்லா பண்ணுங்கிறா..!
---------------------------------------------------------------------
தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா  வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ?

பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா..☹☹ எல்லா கடையிலயும் நிறைய CCTV காமரா வச்சுருக்காங்க...!😉😜
-------------------------------------------------------------------------
கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்.....,   பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவை தேடி போய்  பரிசு கொடுத்தார் மாப்பிள்ளை..  Apple iphone 7 box அவர் கைல.

பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100.

அக்கா பேந்த பேந்த முழிக்க, மாப்பிள்ளை எரிச்சலோடு சொன்னார்....

"இப்படி தானே இருந்து இருக்கும் எனக்கும்"😠😡😡😡😡😡

😂😂😂😂😂😂😂
---------------------------------------------------------------------

No comments:

Post a Comment