Search This Blog

30 October 2017

மனைவி

பல்வேறு மொழிகளில் மனைவியை எப்படி அழைக்கிறார்கள் என்பது பற்றி ஒரு சிறு குறிப்பு!...
நமது மனதிலும், மனையிலும் வீற்றிருப்பவள் என்பதால், *மனைவி* என்றும்...
நமது வாழ்வில் கடைசி வரை துணையாய் வருபவள் என்பதால், *துணைவி* என்றும்.....
நமக்கு பொன் நகையை தாலாட்டி வருகிறாள் என்பதால், *பொண்டாட்டி* என்றும்...
நம்மை கொஞ்சி மகிழ்ந்து மடியில் சாய்ந்திடுவாள் என்பதால், *பொஞ்சாதி* என்றும்...
காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், *ஆத்துக்காரி* என்றும்...
வீட்டில் இரவு வந்ததும் காரிருளை நீக்கி விடுகிறாள் என்பதால், *வீட்டுக்காரி* என்றும்...

கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், *பீபி* (ஹிந்தி) என்றும்...
உனக்கு கடைசி வரை நாந்தான் எல்லாம் என்பதால், *பெல்லாம்* (தெலுகு) என்றும்...
நம்மை மதி மயக்கி அவள் சிரித்துக் கொண்டே இருப்பதால், *ஸ்ரீமதி* (நேபாளி) என்றும்...
நம் மனதில் கார்த்திகை தீபம் போல் ஜொளிப்பவள் என்பதால், *மனகார்த்தி* (கன்னடம்) என்றும்...
கணவனை என்றும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள் என்பதால், *கன்டித்தி* (கன்னடம்) என்றும்...
இந்த உலக சந்தோஷங்களை என்னிடம் பாரய்யா என்பதால், *பாரியா* (மலையாளம்) என்றும்...
வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் இணைந்து இருக்கிறாள் என்பதால் *Wife* (ஆங்கிலம்) என்றும்...
கடைசிவரை நம்மை விட்டுப் பிரியாமல் ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக் கொண்டு வருவதால் *ஜவ்ஜத்* (அரபிக்) என்றும்...
வேலைக்கு செல்லும் போது அசையும் சொத்து போல கையசைத்து பை பை சொல்வதால், *அஷாவா பபாய்* (பிலிப்பைன்ஸ்) என்றும்...
காலம் முழுவதும் நாந்தான்யா உனக்கு பவ்ளர் என்பதால், *பவுள* (சிங்களம்) என்றும்... சொல்கிறார்கள்...

28 October 2017

திருமணம்

மாப்பிள்ளை கால் சென்டர் வெச்சிருக்கார்னு சொன்னதை நம்பி பொண்ணு கொடுத்தது தப்பாப் போச்சுன்னு சொல்றீங்களே, ஏன்?
அவர் விற்கிற ஆட்டுக்கால், மாட்டுக்கால் கடையைத்தான் அப்படி கால்சென்டர்னு பேர் வெச்சிருக்கார்..!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை,....
“உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது”
“வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்விட்டது”
என்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட?
---------------------------------------------------------------------------------------------------------------------------------

26 October 2017

நண்பர்கள்

அன்னே 200 அடி உயரத்துல இருந்து விழுந்தா எந்திருச்சு வேகமா ஓட முடியுமா ?
அது எப்படிடா முடியும் ???
ஓடுதே ! எங்க ஊருல அருவி ஒன்னு அப்படித்தான் ஓடுது
--------------------------------------------------------------------------------------------------------------------------------
Frienda வாடா னு கூப்பிட்டேன்
வரலை னு சொன்னான்
ஏன்டான்னு கேட்டேன்
...
வேளை இருக்குனு சொன்னான்
அப்டி என்னைய விட்டுட்டு என்ன டா வேளைனு கேட்டேன்
முடி வெட்ட போறேனு சொன்னான்....
நான் அப்படியே ஷாக் ஆயி, லீவு நாள வேஸ்ட் பண்ணாம குடும்ப கஷ்டத்தை உணர்ந்து, உன் செலவுக்காகவாவது ஆகட்டும்னு, எந்த தொழிலையும் இழிவா நினைக்காம, முடி வெட்டியாவது சம்பாதிக்கனும்னு நினைக்கிற பாரு, உண்மையிலையே உன்னை மாதிரி ஒருத்தர் எனக்கு நண்பரா வாய்ச்சதுக்கு நா போனா ஜென்மத்துல செஞ்ச புண்ணியம் தான் டா காரணம்னு சொல்லிக்காட்டே அவன் முகத்தை பார்த்தா கண்ணு இரண்டு சிவந்து போய் ரொம்ப கொடுரமா முறைச்சு கிட்டே.....
உன் கூடயெல்லாம் இருந்தா எப்படி டா உறுப்பனும்ங்கிற எண்ணம் வரும், அப்படியே வந்தா மட்டும் உறுப்புட தான் விட்டுருவியா, நான் முடி வெட்டிக்க போரேன்னு சொன்னான்....
அப்ப தான் போன நிம்மதி திரும்ப வந்தது...
இவனெல்லாம் உருப்புட விட்டா , இவன காண்பிச்சே நம்மளை நம்ம வீட்டுல கிரிச்சு கொட்டு வான்க.........
-------
-----------------------------------------------------------------------------------------------------------------------------

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
...
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
😂😂😂😂😂😂😂
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஏன் … உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?
புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாணி : நீ சொன்னயேன்னு அந்த டாக்டர் கிட்டே போனேன். அவர் என்னை ரொம்ப நேரம் உத்து உத்துப் பார்த்தாருடி.
ராணி : நான்தான் சொன்னேனே, இந்த ஏரியாவுலேயே அவர்தான் நல்லாப் பார்ப்பாருன்னு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"
"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."
-------------------------------------------------------------------------------------------------------------------------------
சுப்பு நாங்க புது நாய் வாங்கி இருக்கோம் வந்து விளையாடி
பார்க்கிறாயா?
கடிக்குமா?
அதை தெரிஞ்சுக்கத்தானே உன்னை கூப்பிடறேன்!
---------------------------------------------------------------------------------------------------------------------------
 சே! இந்தக் காலத்துப் பெண்களுக்கு துப்பட்டா நழுவி
கீழே விழறது கூட தெரியலையே…!
ஏன் அப்படி சொல்றே?
ரோட்டுல, பொண்ணோட துப்பட்டா விழுந்ததும் , துப்பட்டா…
துப்பட்டாம்மா’னு கத்தினேன்….துப்பிக்கோ…, என்னை ஏன்...
கேட்கிறேன்னு சொல்லிட்டு போயிட்டே இருந்துட்டா…!

------------------------------------------------------------------------------------------------------------------------------
VIMALA : உன் கணவருக்கு நீ ஊட்டி விட்டதை நான்
பார்த்தேன்…!
KAMALA : அடி போடி…நீங்க செய்த சப்பாத்தி எப்படி இருக்குன்னு
நீங்களே பாருங்கன்னு அவர் வாயில் திணித்தேன்…!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
எ‌ன் பையனு‌க்கு சூரியன்னு பே‌ர் வ‌ச்சது த‌ப்பா‌ப் போ‌ச்சு.
ஏ‌ன் ந‌ல்ல பேருதானே.
நீ வேற எ‌தி‌ர் ‌வீ‌ட்டு ‌நிலாவை சு‌த்‌தி சு‌த்‌தி வ‌ந்து‌க்‌கி‌ட்டிரு‌க்கா‌ன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------




24 October 2017

குடிகாரன்

குடி போதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்த வனை லத்தியால் தட்டி எழுப்பிய அந்தக் கான்ஸ்டபிள் கோபத்துடன் கேட்டார்.
"ஏய்! தலைகால் புரியாம விழுந்து கெடக்கிறியே, எவ்வளவு குடிச்சே?"
"சார்! ஒரு ஃபுல் பாட்டிலயும் குடிச்சிட்டேன்."
...
“ஏன்யா... இப்படி நிதானம் தவறும் அளவுக்கா குடிப்பது? ஒரு லிமிட் வேணாம்?”
கேட்ட அந்த கான்ஸ்டபிளைப் பார்த்து வருத்தத்துடன் சொன்னார்.
“நெலம அப்படி சார். குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிப் போச்சு.!”
சொன்னவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே தனிந்த குரலில் கேட்டார்.
“அப்படி என்ன கட்டாயம்.?”
கான்ஸ்டபிள் கேட்டதும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவரைப் பார்த்துச் சொன்னார்.
”பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு... சார்.!”

-------------------------------------------------------------------------------------------------------------------------

" பார்ல " செலவு பண்ணா ஆண்பால்....
" பார்லர்ல " செலவு பண்ணா பெண்பால்....
அம்புட்டு தாங்க....!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 

09 October 2017

பள்ளிக்கூடம்

ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....???
ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
😀ஆசிரியர் :  ரூபாய் நோட்டப் பத்தி மூனு வரில ஏதாவது சொல்லு?!
😀மாணவன் :...
RBI அடிக்குது! !
SBI கொடுக்குது!!
CBI புடிக்குது!!

--------------------------------------------------------------------------------------------------------------------------------

"நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
"ஏன் கேக்கறே"
"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"😄😄
--------------------------------------------------------------------------------------------------------------------------------

Teacher : யார் அடுத்த கேள்விக்கு பதில் சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு போயிரலாம்..
(உடனே ஒரு பையன் அவன் bag ah
தூக்கி வெளிய போட்டான்)
...
Teacher (கோபமா) : எவன்டா bagahதூக்கி வெளிய போட்டது..
Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன்
கிளம்புறேன்..
நாங்க எப்போதும் இப்படித்தான்.....😆😆😆😷😷
---------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?

மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...

டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?

மாணவன்: ஆமா டீச்சர்... முயற்சி பண்ணினேன்...
 ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை...

டீச்சர் ;ஏன்டா...????

மாணவன்: அது பூஜை ரூமுல இருந்துச்சி...

டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?

மாணவன்: இல்ல டீச்சர்...
 குளிக்கலல்ல... எப்பிடிப் போறது..?

டீச்சர் : குளிக்கலையா....ஏன்?

மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல...🤗

டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும😤

மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க... சொன்னேன்ல கரண்டு இல்லன்னு...😇

டீச்சர்: ஏன்டா... அது சரி நானும் உன் ஏரியாவுல தான் குடியிருக்கன்... எங்க வீட்லலலாம் கரண்டே கட்டாகலியே... பொய்யா சொல்ட்ற..🙄

மாணவன்:உண்ம தான் டீச்சர்... எங்க வீட்ல மட்டுந்தான் கரன்ட் இல்ல... கரண்ட் பில் கட்டலன்னு பீச புடிங்கிட்டாங்க...😣

டீச்சர்; கரண்ட் பில் கட்டக்கூடவா உங்கப்பாட்ட காசு இல்ல...🙃

மாணவன்; ஈ.பி ஆபீசுல போயி பணம் கட்டியாச்சி... லைன் மேன் தான பீசு போடணும்... அவரு வரல...😕

டீச்சர்; ஏரியா லைன்மேன் போன் நம்பர வாங்கி வரசொல்ல வேண்டியது தான...😒

மாணவன்; வரச்சொல்லலாம் தான்... ஆனா முடில...😰

டீச்சர்;ஏன்... செல்லு ரீசார்ஜ் பண்ணலியா...😧

மாணவன்;அதுலாம் இருக்கு... செல்லுல சார்ஜ் தான் இல்ல...😡

டீச்சர்: அது ஏன்...😵


மாணவன்; டீச்சர் நீங்க லூசே தான்...😠 அதான் மொதல்லயே  சொன்னேன்ல... எங்க வீட்ல கரண்ட் இல்லன்னு...😬
_-----------------------------------------------------------------------------------------------------------

06 October 2017

தத்துவம்

1. மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி... அப்ப... கீழே இருந்து மேலே போனால்....??? அது.... குருவி....!!!
2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....
3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...
4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.
5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?
6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.
7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....
 8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....
9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....
10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....
11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...
12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்....
ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.
13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.
14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.
15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்.....
16. அன்று வீட்டுக்கு வீடு செல்லப் பிராணி வளர்த்தவங்களுக்கு
இன்று 'செல்'லே பிராணி ஆகிப்போச்சு.
17.காந்திஜி நோட்டு கொடுத்து பீர் வாங்குனா தப்பில்லையாம்...🍺🍺🍺
காந்திஜி பிறந்த நாளுக்கு பீர் வாங்குனா மட்டும் தப்பாம் 🍺🍺🍺
என்னங்கடா_உங்க_ நியாயம்...
18. தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்-
அப்படியானால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை
...
19. தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்-
அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை
20. தினமும் 2 மணி நேரம நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்-
அப்படியென்றால திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை
21. தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும்-
அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்

02 October 2017

மருத்துவமனை

முன்பெல்லாம்  'ஆல் அவுட்' போட்டா கொசு அவுட்டு..
இப்போ.. கொசு போட்டா... 'ஆள்' அவுட்டு...
--------------------------------------------------------------------------
😁சக்கரை இல்லையென்று
டாக்டர் சொல்லும்போது
சந்தோசப்படுறோம்.
ரேசன் கடைக்காரர் சொல்லும்போது வருத்தப்படுறோம்.
#அவ்ளோதான் சார் வாழ்க்கை. 😂😂😂😜💓👈🏻💐
 --------------------------------------------------------------------------