Search This Blog

26 October 2017

நண்பர்கள்

அன்னே 200 அடி உயரத்துல இருந்து விழுந்தா எந்திருச்சு வேகமா ஓட முடியுமா ?
அது எப்படிடா முடியும் ???
ஓடுதே ! எங்க ஊருல அருவி ஒன்னு அப்படித்தான் ஓடுது
--------------------------------------------------------------------------------------------------------------------------------
Frienda வாடா னு கூப்பிட்டேன்
வரலை னு சொன்னான்
ஏன்டான்னு கேட்டேன்
...
வேளை இருக்குனு சொன்னான்
அப்டி என்னைய விட்டுட்டு என்ன டா வேளைனு கேட்டேன்
முடி வெட்ட போறேனு சொன்னான்....
நான் அப்படியே ஷாக் ஆயி, லீவு நாள வேஸ்ட் பண்ணாம குடும்ப கஷ்டத்தை உணர்ந்து, உன் செலவுக்காகவாவது ஆகட்டும்னு, எந்த தொழிலையும் இழிவா நினைக்காம, முடி வெட்டியாவது சம்பாதிக்கனும்னு நினைக்கிற பாரு, உண்மையிலையே உன்னை மாதிரி ஒருத்தர் எனக்கு நண்பரா வாய்ச்சதுக்கு நா போனா ஜென்மத்துல செஞ்ச புண்ணியம் தான் டா காரணம்னு சொல்லிக்காட்டே அவன் முகத்தை பார்த்தா கண்ணு இரண்டு சிவந்து போய் ரொம்ப கொடுரமா முறைச்சு கிட்டே.....
உன் கூடயெல்லாம் இருந்தா எப்படி டா உறுப்பனும்ங்கிற எண்ணம் வரும், அப்படியே வந்தா மட்டும் உறுப்புட தான் விட்டுருவியா, நான் முடி வெட்டிக்க போரேன்னு சொன்னான்....
அப்ப தான் போன நிம்மதி திரும்ப வந்தது...
இவனெல்லாம் உருப்புட விட்டா , இவன காண்பிச்சே நம்மளை நம்ம வீட்டுல கிரிச்சு கொட்டு வான்க.........
-------
-----------------------------------------------------------------------------------------------------------------------------

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
...
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
😂😂😂😂😂😂😂
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஏன் … உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?
புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாணி : நீ சொன்னயேன்னு அந்த டாக்டர் கிட்டே போனேன். அவர் என்னை ரொம்ப நேரம் உத்து உத்துப் பார்த்தாருடி.
ராணி : நான்தான் சொன்னேனே, இந்த ஏரியாவுலேயே அவர்தான் நல்லாப் பார்ப்பாருன்னு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"
"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."
-------------------------------------------------------------------------------------------------------------------------------
சுப்பு நாங்க புது நாய் வாங்கி இருக்கோம் வந்து விளையாடி
பார்க்கிறாயா?
கடிக்குமா?
அதை தெரிஞ்சுக்கத்தானே உன்னை கூப்பிடறேன்!
---------------------------------------------------------------------------------------------------------------------------
 சே! இந்தக் காலத்துப் பெண்களுக்கு துப்பட்டா நழுவி
கீழே விழறது கூட தெரியலையே…!
ஏன் அப்படி சொல்றே?
ரோட்டுல, பொண்ணோட துப்பட்டா விழுந்ததும் , துப்பட்டா…
துப்பட்டாம்மா’னு கத்தினேன்….துப்பிக்கோ…, என்னை ஏன்...
கேட்கிறேன்னு சொல்லிட்டு போயிட்டே இருந்துட்டா…!

------------------------------------------------------------------------------------------------------------------------------
VIMALA : உன் கணவருக்கு நீ ஊட்டி விட்டதை நான்
பார்த்தேன்…!
KAMALA : அடி போடி…நீங்க செய்த சப்பாத்தி எப்படி இருக்குன்னு
நீங்களே பாருங்கன்னு அவர் வாயில் திணித்தேன்…!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
எ‌ன் பையனு‌க்கு சூரியன்னு பே‌ர் வ‌ச்சது த‌ப்பா‌ப் போ‌ச்சு.
ஏ‌ன் ந‌ல்ல பேருதானே.
நீ வேற எ‌தி‌ர் ‌வீ‌ட்டு ‌நிலாவை சு‌த்‌தி சு‌த்‌தி வ‌ந்து‌க்‌கி‌ட்டிரு‌க்கா‌ன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------




No comments:

Post a Comment