Search This Blog

25 November 2017

உறவுகள் மேம்பட ...!

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசலகள்; ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்களில் மேலும் பெரிதாகாமல் இருக்கவும் ...

1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.
2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள் (Loose Talks)
3. எந்த விடயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (Diplomacy). விட்டுக் கொடுங்கள் (Compromise).
4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் (Tolerance) என்பதை உணருங்கள்.
5. நீங்கள் சொன்னதே சரி,செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் (Adamant Argument).
6. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் (Narrow Mindedness).
7. உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (Carrying Tales).
8. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள் (Superiority Complex).
9. அளவுக்கதிகமாய் ,தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over Expectation).
10. எல்லோரிடத்திலும் எல்லா வி;ஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
11. கேள்விப்படுகின்ற எல்லா விடயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ ,இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
12. அற்ப விடயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்
13. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (Flexibility).
14. மற்றவர் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (Mis-understanding).
15. மற்றவர்களுக்குரிய மரியாதையைக் காட்டவும் ,இனிய இதமான சொற்களைபட பயன்படுத்தவும் தவறாதீர்கள் (courtesy).
16. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
17. பேச்சிலும் ,நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் ,பண்பையும் காட்டுங்கள்
18. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
19. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.


 

No comments:

Post a Comment