Search This Blog

16 January 2018

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தைமகளின் வருகை நாளில்
தமிழ் மணக்க குலவையிட்டு
விளைச்சலால் சோறு தந்த
விவசாயத்தை போற்றுவோம்..!

பச்சரிசி அச்சு வெல்லம்
படையலாக பொங்கல் வச்சு
பகலவனை வணங்கும் நாளில்
பகைவரையும் வாழ்த்துவோம்..!

தேன்கரும்பும் வாழைப்பழமும்
தேடி தேடி வாங்கி வந்து
பசி உள்ள வயிற்றுக்கு
ருசி தந்து மகிழ்ந்திடுவோம்..!

சகலமும் குறைவின்றி
சந்தோசம் பொங்கி வர
சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் கொண்டாடுவோம்..!


இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்..!!!

No comments:

Post a Comment