Search This Blog

26 August 2018

தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்

*தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்*🧐🤔*
*

நான்கெழுத்துச் சொல்லாம்
முதலெழுத்துப்
போய்விட்டால்
பெண்ணாகும்
இரண்டாம் எழுத்துத்
தனிநின்றால்
ஒரு திங்கள்
அவ்வெழுத்தோடி
விட்டால் கடுங்காற்றாம்
முதலும்  ஈறும்
ஒன்றிணைந்தால்
மாட்டுணவாம்
முதலிரண்டும்
ஒன்றானால்
மண்ணில் மூடல்

அறிவில் தோண்டி
ஆய்ந்தறிவீர்.

5 comments:

  1. நான்கெழுத்துச் சொல்லாம்:புதையல்

    முதலெழுத்துப்
    போய்விட்டால்
    பெண்ணாகும்: தையல்

    இரண்டாம் எழுத்துத்
    தனிநின்றால்
    ஒரு திங்கள்: தை

    அவ்வெழுத்தோடி
    விட்டால் கடுங்காற்றாம்: புயல்

    முதலும் ஈறும்
    ஒன்றிணைந்தால்
    மாட்டுஉணவாம்: புல்

    முதலிரண்டும்
    ஒன்றானால்
    மண்ணில் மூடல்: புதை

    ReplyDelete