Search This Blog

19 April 2020

மரபு முறைமை

#பரம்பரை_மரபு

பரம்பரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உலக பரம்பரை தினம் ஏப்ரல் 18 அன்று கொண்டாடி வருகிறோம். 

அதைப் பற்றி சுருக்கமாக:

நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
 பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
 பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
 ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
 சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
 பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை - பரம்பரை.

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை - 480 வருடங்கள்.
 ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்) ஆக,
 பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். 

மரபு முறைமையும், உறவுமுறையும்:
மேலே கண்டவாறு பல்வேறு விதமாகவும், பல மட்டங்களிலும் உறவுகள் அமைந்தாலும், இத்தகைய உறவுகளின் முக்கியத்துவம் வேறு பல அடிப்படைகளையும் சார்ந்துள்ளது. வெவ்வேறு சமுதாயங்களில் நிலவும் பண்பாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் குறிப்பிட்ட சில உறவினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மரபு முறைமைகள் வழக்கத்தில் உள்ளன.

 இம்மரபு முறைகள் பொதுவாக நான்கு வகைகளாக வகுக்கப்படுகின்றன.

* இருவழி மரபு முறைமை (Bilateral Descent System):- இருவழி மரபைப் பின்பற்றும் சமுதாயங்களில், தாய்வழியையும், தந்தைவழியையும் சேர்ந்த உறவினர் அனைவருக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

* ஒருவழி மரபு முறைமை (Unilineal Descent System):- ஒருவழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழியில் அல்லது தந்தைவழியில் மட்டுமே தங்களை இணைத்து இனங்காண்கிறார்கள். தாய்வழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழி உறவினருக்கும், தந்தைவழிச் சமுதாயங்கள் தந்தைவழி உறவினருக்கும் கூடிய சிறப்பை அளிக்கின்றன.

* ஈரியல் மரபு முறைமை (Ambilineal Descent System):- ஈரியல் மரபுச் சமுதாயங்களின் உறுப்பினர்கள் இரண்டில் ஒரு வழியில் தங்களை இனங்கண்டுகொள்வர்.

* இணை மரபு முறைமை (Parallel Descent System):- இணை மரபு முறையைக் கைக்கொள்ளும் சமுதாயத்தவர்களில் ஆண்கள் தங்கள் குடிவழித் தொடர்புகளைத் தந்தைவழியிலும், பெண்கள் தாய்வழியிலும் இனங்காண்பர்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை. நாம் உலக வரலாறு தெரிந்து கொள்வதும் முக்கியம்.

 அதேபோல் நம்முடைய வரலாறும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நம் முன்னோர்கள் அதாவது தமிழர்கள் உலகம் எங்கும் நிறைந்து காணப்படுகிறார்கள். எப்படி? அதன் பின் நடந்தது என்ன? என்று நாம் வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment