Search This Blog

16 January 2018

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தைமகளின் வருகை நாளில்
தமிழ் மணக்க குலவையிட்டு
விளைச்சலால் சோறு தந்த
விவசாயத்தை போற்றுவோம்..!

பச்சரிசி அச்சு வெல்லம்
படையலாக பொங்கல் வச்சு
பகலவனை வணங்கும் நாளில்
பகைவரையும் வாழ்த்துவோம்..!

தேன்கரும்பும் வாழைப்பழமும்
தேடி தேடி வாங்கி வந்து
பசி உள்ள வயிற்றுக்கு
ருசி தந்து மகிழ்ந்திடுவோம்..!

சகலமும் குறைவின்றி
சந்தோசம் பொங்கி வர
சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் கொண்டாடுவோம்..!


இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்..!!!

15 January 2018

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ஞானத்"தை" பிறந்து
தர்மத் *தை* வளர்க்கட்டும்...
ஆணவத் *தை* ஒழிந்து
ஆனந்தத் *தை* நல்கட்டும்...
அதர்மத் *தை* அழித்து
சத்தியத் *தை* காக்கட்டும்..
சாதி மதத் *தை* நீக்கி
சமரச *தை* ஓங்கட்டும்...
வளத் *தை* பெருக்கி
செல்வத் *தை* கொடுக்கட்டும்...
துன்பத் *தை* போக்கி
இன்பத் *தை* வழங்கட்டும்...
கர்வத் *தை* அடக்கி
கர்மத் *தை* விரட்டட்டும்....
ஒழுக்கத் *தை* வளர்த்து
அடக்கத் *தை* பெருகட்டும்...
துயரத் *தை* நீக்கி
பஞ்சத் *தை* போக்கட்டும்...
மாமிசத் *தை* தவிர்ப்போம்...
மனிதநேயத் *தை* வளர்ப்போம்..
நல்ல *தை*யே நினைப்போம்..
நல்ல *தை*யே செய்வோம்...
நல்ல *தை*யே போதிப்போம்...உங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

14 January 2018

அறுவடை திருநாள்

அரிசி பொங்க,
ஆசை பொங்க,
இன்பம் பொங்க,
ஈகை பொங்க,
உழைப்பு பொங்க,
ஊக்கம் பொங்க,
எளிமை பொங்க,
ஏற்றம்  பொங்க,
ஐங்கரன் பொங்க,
ஒற்றுமை பொங்க,
ஓம்காரம் பொங்க,
ஔவ்வியம் பொங்க,
பொங்களை உயிராய்,  மெய்யாய், உயிர்மெய்யாய்,
உழுதுண்டு வாழ்வோரை உள்ளம் குளிர வாழ்த்துவோம்!!!
போகி பொங்கல்!
பெரும் பொங்கல்!!
மாட்டு பொங்கல்!!!
காணும் பொங்கல்!!!!
வாழ்த்துக்கள்!!!
தமிழர் அறுவடை திருநாள் வாழ்த்துக்கள்!!!
மகிழ்ச்சி!!!

13 January 2018

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா செல்வமும்
🍇அன்புடை சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ
🌾இத் தை திருநாளில்
🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞

உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝

🙏அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🙏