1. மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா". மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்". யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...
2. மனைவி: இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு, நீங்க ஆபீஸ் போக வேண்டாங்க!
கணவன்: என்னை நம்பு செல்லம்... சத்தியமா எனக்கு வத்தல் போடத் தெரியாது!
3. ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு
ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
😂😂
மனைவி : என்னங்க window lock open ஆகமாட்டிகுது..!!
கணவன் : கொஞ்சம் எண்ணெய் சூடு பண்ணி ஊத்துமா open ஆகியும்..!!
மனைவி :அப்படியாங்க..?
கணவன் :try panni paaru ma..!!
After 10 min
கணவன் :open ஆச்சாம்மா..??
மனைவி :இல்லிங்க இப்ப laptop off ஆயிருசுங்க இன்னு கொஞ்சம் எண்ணெய் ஊத்தி பாக்கவாங்க..??
கணவன் : அடிப்பாவி எந்த windowனு ஒழுங்க சொல்ல மாட்டியா..!! 😡😡😡😡😡
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு
எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத...
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?
"கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு...
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: எந்தக் காரணமும் இல்லாமல் குடிக்கமாட்டேனு சொன்னீங்களே இப்போ எதுக்கு குடிச்சீங்க?
கணவன்: அது ஒண்ணுமில்லைடி... தீபாவளி ராக்கெட் வைக்க பையன் பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்...
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?
மனைவி:
இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி
யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா
தெரியுதான்னு செக் பண்ணத்தான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கணவன்: (போன் ரிஸீவரை பொத்தியபடி) ''அடியே, அம்மா பாத்ரூமில வழுக்கி விழுந்துட்டாங்களாம்...''
மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது வேண்டியதுதான்!''
கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''
மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
-----------------------------------------------------------------------------------------------------------------------------
குரு: என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது?
கிரி:என்
பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ
சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
போனில்...
''நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்...''
''ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..'
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி ; ஏன்ங்க நான் பாக்குறதுக்கு எப்புடி இருக்கேன் ? அழகா இருக்கேனா?
கணவன் ; .........!
மனைவி ; கேட்குறேன்ல சொல்லுங்க
...
கணவன் ; .........!
மனைவி ; ஹலோ, கேட்குறது காதுல விழுவதா இல்லையா?
கணவன் ; .........!
மனைவி ; அட சொல்லுங்க அழகா இருக்கேனா?
கணவன் ; ரதி மாதிரி இருக்க.
மனைவி ; (கோபமாய்) யாருயா அவ ரதி ??
கணவன் ; பார்த்தியா நான் சும்மா தானே இருந்தேன் . உன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்ட..
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!
கணவன்: நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி : எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே ஏன் ?
கணவன் : இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும் . ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க.. கொஞ்சம் வாங்க.. குழந்த அழுவுது..
கணவன்: அடி செருப்பால! உன்னை எவன்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
...
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி : என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க
கணவன் : வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...
மனைவி : ???????????????????
-----------------------------------------------------------------------------------------------------------------------------
Husband: என்ன டின்னர்?
Wife: *மதியம் மிச்சமான சோத்துல முட்டையை, மிளகு போட்டு தாளிச்சு வச்சு இருக்கேன்..*
Husband: எனக்கு பசிக்கலை.!
...
🙄
🙄
🙄
அடுத்த நாள்..
Husband: என்ன டின்னர்?
Wife: *பெப்பர் எக் ஃப்ரைட் ரைஸ்*
Husband: அட சூப்பர்.!
😀
😀
😀
*நீதி*:
சோறு வைக்கிறது பெருசு இல்லை...
அதுக்கு பேரு வைக்கறது தான் பெருசு.!
----------------------------------------------------------------------------------------------------------------------------
கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-
கணவன்: உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!...
மனைவி: பொய் சொல்லாதே... என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!...
...
நிச்சயம் பண்ணும் போது 100 பேரோட வந்தே!!...
தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே!!!...
ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பாத்தியா!...
இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
கணவன்:
😳
😳
😳
😳.
----------------------------------------------------------------------------------------------------------------------------
🤔 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா
😐)"
"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"
"(ஆத்தி இடியாப்பமா இது
😳
😭)
...
சூப்பர் செல்லம்
👌
😀"
-----------------------------------------------------------------------------------------------------------------------------
👻 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி
😉
😉
-----------------------------------------------------------------------------------------------------------------------------
😱 மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது? போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
😜 கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது
😍 
--------------------------------------------------------------------------------------------------------------------------
கஷ்டம் என்பது பொண்டாட்டி
மாதிரி.......
😂
எப்பவும் நம்ம கூடவேதான்
இருக்கும்.....
😂
ஆனா சந்தோஷம் என்பது
...
மச்சினிச்சி மாதிரி....
😃
😍
அப்ப அப்போ வந்துட்டு போயிடும்..
----------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: "கல்யாணத்துக்கு முன்னாடி சினிமா பீச் ஹோட்டல் எல்லாம் அழைச்சிட்டு போனீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் ஏன் எங்கேயும் அழைச்சுட்டு போறதே இல்ல..."
கணவன்: "தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் எவனாவது பிரச்சாரத்துக்கு போவானாடீ ... "
😜
--------------------------------------------------------------------------------------------------------------------------------
புருஷன் பொண்டாட்டி பிரச்னைகளை, ஒரே அறையில் பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்று பெரியவர்கள் சொன்னதை சில பொண்டாட்டிங்க தப்பா புரிஞ்சிகிறாங்க...!!
ஒரே_ அறை.. காது ஙொய்னுது..
😜
----------------------------------------------------------------------------------------------------------------------------
காலையில் பால் காய்ச்ச ஸ்டவ்ல வச்சுட்டு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிணா... பால் பொங்கவே இல்ல...
அப்புறம் திறந்து பாத்தா; அது....
இட்லி மாவு
😱
😰
...
அப்புறம்....
பொண்டாட்டிக்கு தெரியாம அதை டிஸ்போஸ் பண்ண நான் பட்ட அவஸ்தையை...
ஒரு கொலகாரன் கூட பொணத்தை மறைக்கப் இத்தனை பட்டிருக்கமாட்டான்
🤣
😂
-------------------------------------------------------------------------------------------------------------------------
கணவன் : என்னடி கொழம்பு ஒரே இனிப்பா இருக்கு..
மனைவி : அதுவாங்க
தக்காளிய விட ஆப்பிள் விலை கம்மியா இருந்துச்சி அதான், ஆப்பிள் சாம்பார் வச்சிட்டேன்...
--------------------------------------------------------------------------------------------------------------------------